ஆயுஷ்

மூலிகை மருந்துகள் மற்றும் ஆயுஷ் மருத்துவத்துக்கு ஊக்கம்

Posted On: 05 FEB 2021 7:34PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக  பதிலளித்த மத்திய ஆயுர்வேதா, யோகா & நேச்சுரோபதி, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி இணை அமைச்சர் (கூடுதல் பொறுப்பு) திரு கிரண் ரிஜிஜூ, கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

மூலிகை மருந்துகளை ஊக்குவிக்கவும், பிரபலப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை ஆயுஷ் அமைச்சகம் மேற்கொண்டு  வருகிறது. ஆரோக்யா கண்காட்சிகள், மேளாக்கள் உள்ளிட்டவற்றை தேசிய அளவிலும், மாநில அளவிலும் நடத்துதல், ஆயுஷ்  சிகிச்சை முறைகள் குறித்த விளம்பரங்களை வெளியிடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மூலிகைத் தாவரங்களை பயிரிடுவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை, தேசிய மருத்துவ தாவரங்கள் இயக்கத்தின் கீழ் 30282.4 ஹெக்டேர் நிலத்திற்கும், தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ் 3931 ஹெக்டேர் நிலத்திற்கும் என மொத்தம் 34213.4 ஹெக்டேர் நிலத்திற்கு ஆதரவளிக்கப்படுகிறது.

ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகளை நாடு முழுவதும் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை ஆயுஷ் அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மூலம் தேசிய ஆயுஷ் இயக்கம் என்னும் மத்திய அரசு திட்டத்தை ஆயுஷ் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது,. இதன் மூலம் ஆயுஷ் சிகிச்சை முறைகளின் மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பிற்காக நிதியுதவி வழங்கப்படுகிறது.

மருத்துவத் தாவரங்களின் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் நீடித்த மேலாண்மைக்கான மத்திய திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 மாநில வனத் துறைகள் மூலம் 57 சுய உதவிக்குழுக்களுக்கு (மகாராஷ்டிராவில் 10, பஞ்சாபில் 36 மற்றும் உத்தரகாண்டில் 11) ஆதரவு வழங்கப்படுகிறது.

----- 


(Release ID: 1695679) Visitor Counter : 131


Read this release in: English , Manipuri