வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

மேக் இன் இந்தியா 2.0, முக்கிய துறைகள் மற்றும் ஏற்றுமதிகளின் வளர்ச்சி விகிதம், அந்நிய நேரடி முதலீடு உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் செய்யப்பட்ட அறிவிப்புகள்

Posted On: 03 FEB 2021 5:16PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்து ப்பூர்வமாக பதிலளித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் இணை அமைச்சர்கள் திரு சோம்பர்காஷ் மற்றும் திரு ஹர்தீப் சிங் பூரி ஆகியோர், கீழ்காணும் தகவல்களை அளித்தனர்.

அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பல துறைகளில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. 2019-20 நிதி ஆண்டில் இது வரை இல்லாத அளவில் $74.39 பில்லியன் அந்நிய நேரடி முதலீட்டை நாடு ஈர்த்துள்ளது.

ஒரு மாவட்டத்தின் உண்மையான திறனை புரிந்துகொண்டு அதற்கேற்ப அதன் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, ஒரு மாவட்டம், ஒரு பொருள் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன் மூலம், கிராமப்புற தொழில்முனைதலும், வேலைவாய்ப்புகளும் பெருகி தற்சார்பு இந்தியா லட்சியத்தை அடைய வழிவகை ஏற்படும். மேற்கு வங்க மாநிலத்தை தவிர நாட்டிலுள்ள மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுக்கள் செயல்படுகின்றன.

2020 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கொரோனாவால்  ஏற்பட்ட கடும் சரிவை தொடர்ந்து, 2020 மே மாதம் மூலம் நாட்டின் எட்டு முக்கிய துறைகளின் ஒட்டுமொத்த உற்பத்தி விகிதத்தில் வளர்ச்சி ஏற்பட்டது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதம் அளவுக்கான ரூ 29.87 லட்சம் கோடி மதிப்பிலான தற்சார்பு தொகுப்பை அறிவித்ததோடு, பொதுத் துறைகளில் கொள்முதல், உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் ஆகியவற்றை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. உள்நாட்டு உற்பத்தியை பெருக்க இவ்வாறு செய்யப்படுகிறது.

மாநில சீர்திருத்த செயல்திட்டம், 2019-இன் படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை வெளியிட்டுள்ளது. 12 முக்கிய சீர்திருத்த புள்ளிகளின் அடிப்படையில் இது வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆந்திரா முதலிடத்தில் உள்ளது.

2014 செப்டம்பர் 25 அன்று மேக் இன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது மேக் இன் இந்தியா 2.0-ன் கீழ் 27 துறைகளின் மீது கவனம் செலுத்தப்படுகிறது. இந்தியாவை நோக்கி முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஏற்கனவே இருக்கும் திட்டங்களைத் தவிர, பல்வேறு புதிய நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2020 ஏப்ரல்-நவம்பர் மாதங்களுக்கான இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியின் மதிப்பு $304.53 பில்லியன் ஆகும். கடந்தாண்டில் இதே காலகட்டத்தின் $351.83 பில்லியனோடு ஒப்பிடும் போது, இது 13.45 சதவீதம் குறைவாகும். அதே சமயம், 2019 செப்டம்பர் மாதத்தில் செய்யப்பட்ட ஏற்றுமதிகளின் மதிப்பான $43.56 பில்லியனோடு ஒப்பிடும் பொது, 2020 செப்டம்பர் மாதத்தில் செய்யப்பட்ட ஏற்றுமதிகளின் மதிப்பான $44.87 பில்லியன் 3 சதவீதம் அதிகமாகும்.

கொவிட்-19 பெருந்தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு 2021 மார்ச் 31 வரை வெளிநாட்டு வர்த்தக கொள்கை (2015-20) நீட்டிக்கப்பட்டுள்ளது.

2017-18-ஆம் நிதி ஆண்டில் $63047.16 மில்லியனாக இருந்த இந்தியா மற்றும் சீனாவுக்கிடையேயான வர்த்தக பற்றாக்குறை, 2020-21 ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில் $25178.72 மில்லியனாக இருந்தது. 2020-21 ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில் ஏற்றுமதிகள் $13639.18 மில்லியனாகவும், இறக்குமதிகள் $38817.90 மில்லியனாகவும் இருந்தன. சீனாவுடனான வர்த்தகத்தை சமன்படுத்த தொடர் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

வர்த்தக கொள்கை ஆய்வு நடைமுறையின் படி இந்திய வர்த்தக கொள்கையின் ஆய்வை உலக வர்த்தக அமைப்பு செய்து வருகிறது. இந்தியாவின் வர்த்தக கொள்கை ஆய்வு கூட்டங்கள் 2021 ஜனவரி 6 மற்றும் 8 அன்று நடைபெற்றன. சமீபத்தில் நடந்த கூட்டங்களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை வர்த்தகம் தொடர்பான விஷயங்கள் சிலவற்றை எழுப்பின.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694802

                                          -------(Release ID: 1694949) Visitor Counter : 223


Read this release in: English , Bengali