வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியாவின் வர்த்தகம்: 2021 ஜனவரி மாதத்தின் ஆரம்பகட்ட தரவு

Posted On: 02 FEB 2021 1:37PM by PIB Chennai

2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 27.24 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் 25.85 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதியைவிட 5.37 சதவீதம் அதிகமாகும். ஏப்ரல் முதல் ஜனவரி 2020-21 வரையிலான ஏற்றுமதி 228.04 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 264.13 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஏற்றுமதியை விட 13.66 சதவீதம் குறைவாகும்.

2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நாட்டின் இறக்குமதி 41.99 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் 41.15 பில்லியன் அமெரிக்க டாலர் இறக்குமதியை விட 2.05 சதவீதம் அதிகமாகும். ஏப்ரல் முதல் ஜனவரி 2020-21 வரையிலான இறக்குமதி 300.26 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 405.33 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இறக்குமதியை விட 25.92 சதவீதம் குறைவாகும்.

2021 ஜனவரி மாதத்தில் இந்தியாவின் நிகர இறக்குமதியின் வர்த்தக பற்றாக்குறை 14.75 பில்லியன் அமெரிக்க டாலர். இதனை கடந்தாண்டு ஜனவரியில் பதிவான 15.30 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக பற்றாக்குறையுடன் ஒப்பிடுகையில் 3.57%  அளவு குறைவாகும்.

பெட்ரோலியம் அல்லாத ஏற்றுமதி 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 25.24 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் ஏற்றுமதியை விட  11.37 சதவீதம் நேர்மறை வளர்ச்சியாகும். பெட்ரோலியம் அல்லாத மற்றும் ரத்தின கற்கள் இல்லாத மற்றும் நகைகளின் ஏற்றுமதி 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 22.40 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதன் அளவு 19.79 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 13.21 சதவீதம் நேர்மறை வளர்ச்சியாகும். ஏப்ரல் முதல் ஜனவரி 2020-21 வரையிலான காலகட்டத்தில் பெட்ரோலியம் அல்லாத மற்றும் ரத்தின கற்கள் இல்லாத மற்றும் நகைகளின் ஏற்றுமதி 188.73 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 2019-20 ஆம் ஆண்டு இதே காலகட்டத்தின் 197.94 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதியை விட 4.65 சதவீதம் குறைவாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694385

******



(Release ID: 1694462) Visitor Counter : 186


Read this release in: English , Marathi , Manipuri