பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

ஆதாரம் அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தில் ஆராய்ச்சி மிக முக்கியம்: திரு அர்ஜூன் முண்டா

Posted On: 31 JAN 2021 6:30PM by PIB Chennai

ஆதாரம் அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தில் ஆராய்ச்சி மிக முக்கியம் என பழங்குடியின விவாகரத்துறை அமைச்சர்  திரு அர்ஜூன் முண்டா கூறியுள்ளார்.

பழங்குடியினரின் நிலையான வளர்ச்சி குறித்து பன்முக அணுகுமுறைஎன்ற தலைப்பில் கடந்த ஜனவரி 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை 3 நாள் இணைய கருத்தரங்கை பழங்குடியினர் விவாகரத்துறை அமைச்சகம், ஐஐபிஏ அமைப்புடன் இணைந்து நடத்தியது.

இந்த கருத்தரங்குக்கு பழங்குடியின விவாகரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சிறப்பு மையங்கள் மற்றும் பழங்குடியினர் ஆராய்ச்சி மையங்களின் தலைவர்கள் தலைமை வகித்தனர்.

 இந்த கருத்தரங்குக்கு அமைச்சர் திரு. அர்ஜூன் முண்டா விடுத்துள்ள செய்தியில், ‘‘ஆதாரம் அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்துக்கு ஆராய்ச்சி மிக முக்கியம். பழங்குடியின மாணவர்களுக்கு கற்கும் சூழல், தேவையான ஆதரவை வழங்கி, மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும்  ஆராய்ச்சி நடவடிக்கைகள் பலவற்றில் அவர்களை ஈடுபடுத்துவதுதான் இந்த கருத்தரங்கின் நோக்கம்’’ என குறிப்பிட்டார்.

இந்த 3 நாள் இணைய கருத்தரங்கில், பழங்குடியினர் சுகாதாரம், டிஜிட்டல் திறன், நாட்டு மருந்து, தொழில் முனைவு வாய்ப்பு, பழங்குடியினரின் கலாச்சார பாதுகாப்பு ஆகியவை பற்றி 70 ஆராய்ச்சி கட்டுரைகள் தாக்கல் செய்யப்பட்டு அது குறித்து பழங்குடியின ஆய்வு மாணவர்கள் விவாதித்தனர்.

பழங்குடியினர் இடம் பெயர்வு, பாரம்பரிய அறிவு, வாழ்வாதாரம், டிஜிட்டல் திறன், தகவல் தொடர்பு கருவிகளின் பங்கு ஆகியவை குறித்த விவாத நிகழ்ச்சிகளும் இந்த இணைய கருத்தரங்கில் நடைப்பெற்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693745

*************************


(Release ID: 1693769) Visitor Counter : 119


Read this release in: English , Urdu , Hindi , Kannada