நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

காரீப் கொள்முதல்: 87.20 லட்சம் நெல் விவசாயிகளுக்கு, ரூ. 1,12,983.55 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை

प्रविष्टि तिथि: 31 JAN 2021 5:39PM by PIB Chennai

காரீப் சந்தை பருவத்தில், காரீப் பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.

தமிழகம், பஞ்சாப் உட்பட நெல் உற்பத்தி செய்யப்படும்  மாநிலங்களில் நெல் கொள்முதல் சுமூகமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 30ம் தேதி வரை, 598.43 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே காலகட்ட கொள்முதலை விட 18.10 சதவீதம் அதிகம்.

இதற்காக சுமார் 87.20 லட்சம் விவசாயிகள், ரூ. 1,12,983.55 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெற்றுள்ளனர்.

மாநிலங்களின் வேண்டுகோள்படி, 51.92 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்ய, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 30ம் தேதி வரை, 3,04,625.51 மெட்ரிக் டன் பாசிப் பயறு, உளுந்து, துவரை, நிலக்கடலை, சோயாபீன்ஸ் ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்துள்ளது.  இதற்காக 1,64,589 விவசாயிகள, ரூ.1,637 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை பெற்றுள்ளனர்.

.மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693723

*************************


(रिलीज़ आईडी: 1693757) आगंतुक पटल : 155
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri