நிதி அமைச்சகம்

சர்வதேச சுங்க தினத்தை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் கொண்டாடியது

Posted On: 27 JAN 2021 8:18PM by PIB Chennai

சர்வதேச சுங்க தினத்தை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் இன்று கொண்டாடியது.

நீடித்த விநியோக சங்கிலிக்கான மீட்டெடுத்தல், புதுப்பித்தல் மற்றும் உறுதியை சுங்கத்துறை மேம்படுத்துதல் என்பது இந்த ஆண்டு சர்வதேச சுங்க  அமைப்பின் மையக்கருவாகும்.

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய தலைவர் திரு எம் அஜித்குமார் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மற்றும் இணை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் ஆகியோரின் வாழ்த்துச்செய்திகள் வாசிக்கப்பட்டன. சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களுக்கு சர்வதேச சுங்க அமைப்பின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

சென்னை மண்டலத்தின் கூடுதல் துணை ஆணையர்கள் திரு ஆர் கோபால்சாமி மற்றும் திருமதி சமயா முரளி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது.

------ (Release ID: 1692804) Visitor Counter : 224


Read this release in: English , Urdu , Hindi