நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
காரீப் கொள்முதல்: 84.71 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,10934.02 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை விநியோகம்
प्रविष्टि तिथि:
26 JAN 2021 7:28PM by PIB Chennai
காரிப் சந்தை பருவத்தில் 84.71 லட்சம் விவசாயிகளுக்கு, இதுவரை ரூ.1,10,934.02 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட்டுள்ளது.
காரீப் பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.
தமிழகம், பஞ்சாப் உட்பட நெல் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் கடந்த 25ம் தேதி வரை 587.57 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் செய்யப்பட்ட கொள்முதலை விட 20.28 சதவீதம் அதிகம்.
இதற்காக 84.71 லட்சம் விவசாயிகள் ஏற்கனவே ரூ.1,10,934.02 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை பெற்றுள்ளனர்.
மேலும், மாநிலங்களின் வேண்டுகோள் படி 51.92 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு, எண்ணெய் வித்துக்கள், கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழக மற்றும் கர்நாடகாவிலிருந்து, 5089 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் ரூ.52.40 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 25ம் தேதி வரை, 18,13,288 விவசாயிகளிடமிருந்து, 88,43,412 பருத்தி கட்டுகள், ரூ.25,825.34 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692526
**********************
(रिलीज़ आईडी: 1692543)
आगंतुक पटल : 137