பாதுகாப்பு அமைச்சகம்

அடுத்த தலைமுறை ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது

प्रविष्टि तिथि: 25 JAN 2021 6:47PM by PIB Chennai

2021 ஜனவரி 25 அன்று ஒடிசா கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து அடுத்த தலைமுறை ஆகாஷ் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக சோதனை செய்தது.

இந்திய விமானப் படையால் பயன்படுத்தப்படவிருக்கும் அடுத்த தலைமுறை  ஏவுகணையான ஆகாஷ், சோதனையின் போது இலக்கை துல்லியமாக தாக்கியது. அனைத்து பரிசோதனைகளும் வெற்றிகரமாக நிறைவுற்றன.

வெற்றிகரமான சோதனையில் ஈடுபட்ட குழுவை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் செயலாலரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவருமான டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி ஆகியோர் பாராட்டினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே

காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692258

**********************


(रिलीज़ आईडी: 1692340) आगंतुक पटल : 312
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी