சுரங்கங்கள் அமைச்சகம்

தேசியப் புவிஅறிவியல் தரவு உருவாக்கத் திட்டங்கள் (2020-24)

Posted On: 25 JAN 2021 12:53PM by PIB Chennai

நம் நாட்டில் ஆய்வு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக, தேசிய  புவிவேதியியல் வரைபடம் (என்ஜிசிஎம்), தேசிய  புவிஇயற்பியல் வரைபடம் (என்ஜிபிஎம்), தேசிய வான்வழி வரைபடத் திட்டம் (என்ஏஜிஎம்பி) ஆகிய தேசிய அளவிலான ஆய்வுகளை வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேக்னடோ-டெல்டூரிக் ஆய்வுகள், ஆழ்ந்த நில அதிர்வு ஆய்வுகள் போன்ற புவிஇயற்பியல் தொழில்நுட்பங்களை இந்த நிறுவனம் பயன்படுத்தவுள்ளது.

இதர தேசிய நிறுவனங்களிடமுள்ள அனைத்து மாநிலங்களின் சுரங்கங்கள், புவியியல் சார்ந்த தரவுகள்; இந்தத் துறையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி, மேம்பாடுகள்; புவிஅறிவியல் சார்ந்த பணிகளில் ஈடுபடும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் துறை முகமைகள் ஆகியவை குறித்த அனைத்து தகவல்களையும் ஒன்றிணைக்கும் முன்முயற்சித் திட்டமான தேசிய புவி அறிவியல் தரவுக் களஞ்சியத்தை அமைக்கும் பணிகளை இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் தொடங்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692109


(Release ID: 1692207) Visitor Counter : 242


Read this release in: English , Urdu , Hindi