புவி அறிவியல் அமைச்சகம்

வட இந்தியாவில் அடுத்த 4-5 நாட்களுக்கு குளிருக்கு வாய்ப்பில்லை: இந்திய வானிலை துறை அறிவிப்பு

Posted On: 22 JAN 2021 12:17PM by PIB Chennai

இந்திய வானிலை துறையின்,  தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் விடுத்துள்ள தற்போதைய மற்றும் அடுத்த 2 வாரங்களுக்கான  ( 2021 ஜனவரி 21 முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை)  வானிலை நிலவரம்: 

* தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால், கேரளா மற்றும் மாஹே மற்றும் ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகாவை ஒட்டியுள்ள பகுதிகளில் 2021 ஜனவரி 19ம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை நின்று விட்டது.   

* கிழக்கு திசையில் வீசிய காற்று காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கடந்த ஜனவரி 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது.

* இதன் காரணமாக கடந்த வாரத்தில் தெற்கு தீபகற்ப பகுதி நீண்ட கால சரசாரிக்கு மேலாக 220 சதவீதம் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகியவை 727 சதவீத மழைப் பொழிவையும் பெற்றது.

* வட இந்தியாவில், அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு குளிர் காற்றுக்கான வாய்ப்பு இல்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691160

-------



(Release ID: 1691264) Visitor Counter : 119


Read this release in: English , Hindi , Bengali , Punjabi