புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

2020 டிசம்பர் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் வெளியீடு

Posted On: 12 JAN 2021 5:30PM by PIB Chennai

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின், தேசிய புள்ளியியல் அலுவலகம்(என்எஸ்ஓ), 2012=100 என்ற அடிப்படையில் கிராமப்புறம், நகர்ப்புறம், மற்றும் இரண்டும் இணைந்தவற்றுக்கான 2020 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்களை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதுமுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 1114 நகர்ப்புற சந்தைகளில் இருந்தும், 1181 கிராமப்புற சந்தைகளில் இருந்தும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின், களப்பணி பிரிவினரால், விலை குறித்த புள்ளி விவரங்கள் வாராந்திர பதிவேட்டில் சேகரிக்கப்படுகின்றன.

அகில இந்திய பணவீக்க விகிதமானது, பொது குறியீடுகள் மற்றும் புள்ளி விவரம் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.   

பணவீக்க விகிதங்களை நுகர்வோர் விலைக் குறியீட்டின் (பொது) அடிப்படையில் சதவீதத்தில் கணக்கிட்டபோது, டிசம்பர் மாதத்தில் (தற்காலிகம்) கிராமப்புறங்களில் 4.07 ஆகவும், நகரங்களில் 5.19 ஆகவும், இரண்டும் இணைந்து 4.59 ஆகவும் இருந்தன.

பணவீக்க விகிதங்களை நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டின் அடிப்படையில் சதவீதத்தில் கணக்கிட்டபோது, டிசம்பர் மாதத்தில் (தற்காலிகம்) கிராமப்புறங்களில் 3.11 ஆகவும், நகரங்களில் 4.08 ஆகவும், இரண்டும் இணைந்து 3.41 ஆகவும் இருந்தன.

************ 


(Release ID: 1688020) Visitor Counter : 248