பாதுகாப்பு அமைச்சகம்

குஜராத் பல்கலைக்கழகம் ஐடிஎஸ்ஆர் மையத்துடன் விமானப்படை புரிந்துணர்வு ஒப்பந்தம்

प्रविष्टि तिथि: 06 JAN 2021 6:33PM by PIB Chennai

விமானப்படை அதிகாரிகளின் மேல் படிப்புக்காக, குஜராத் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புத்துறை படிப்புகள் ஆய்வு மையத்துடன் (ஐடிஎஸ்ஆர்)  விமானப்படை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. 

பாதுகாப்புத்துறை படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி மையம்(ஐடிஎஸ்ஆர்) குஜராத் பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற நிறுவனம். இந்த நிறுவனத்துடன் விமானப்படை 2020ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

 இந்த ஒப்பந்தம் மூலம் விமானப்படை அதிகாரிகள், பாதுகாப்புத்துறை படிப்புகள்பாதுகாப்பு மேலாண்மை, தேசிய பாதுகாப்பு, விண்வெளி மற்றும் விமான அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பி.எச்டி ஆய்வு படிப்புகள், முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகள் ஆகியவற்றைத் தொடர முடியும்.

மேலும் விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686589

-----


(रिलीज़ आईडी: 1686639) आगंतुक पटल : 312
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी