விவசாயத்துறை அமைச்சகம்

காரீப் சந்தை பருவத்தில் சுமார் 64.07 லட்சம் நெல் விவசாயிகளுக்கு, ரூ.94,202.64 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை

இடுகை இடப்பட்ட நாள்: 03 JAN 2021 6:56PM by PIB Chennai

நடப்பு காரீப் சந்தை பருவத்தில் தமிழகம், பஞ்சாப் உட்பட பல மாநிலங்களில் நெல் கொள்முதல் தொடர்ந்து நடக்கிறது. கடந்த 2ம் தேதி வரை 498.95 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே காலத்தைவிட 24.49 சதவீதம் அதிகம்.

காரீப் சந்தை பருவத்தில் சுமார் 64.07 லட்சம் நெல் விவசாயிகள், ஏற்கனவே ரூ.94,202.64 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை பெற்றுள்ளனர்.

மேலும், மாநிலங்கள் தெரிவித்த விருப்பப்படி, 51.66 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதுமேலும், ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2ம் தேதி வரை, 2,61,623 மெட்ரிக் டன் பாசி பயறு, உளுந்து, நிலக்கடலை, சோயா பீன்ஸ் ஆகியவற்றை 1,40,924 விவசாயிகளிடமிருந்து ரூ.1,399.84 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு கொள்முதல் செய்துள்ளது.

கடந்த 2ம் தேதி வரை 75,78,832 பருத்தி கட்டுகள், 14,81,064 விவசாயிகளிமிருந்து ரூ.22,208.01 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685856

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1685865) வருகையாளர் எண்ணிக்கை : 156
இந்த வெளியீட்டை படிக்க: Marathi , English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Telugu