பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம்: ஆண்டு இறுதி கண்ணோட்டம் 2020

Posted On: 02 JAN 2021 1:25PM by PIB Chennai

பட்டியலிலுள்ள பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் மற்றும் கொள்கைகளை வகுப்பதற்கான மைய முகமையாக உள்ள மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம், பல்வேறு முக்கிய மைல்கற்களை 2020-ஆம் கடந்துள்ளது. அவற்றுள் முக்கியமானவற்றில் சில வருமாறு:

* வனப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சிறிய ரகப் பொருட்களை, குறைந்தபட்ச ஆதரவு விலை மூலமாக விற்பனை செய்யும் முறையின் கீழ் கூடுதலாக 23 பொருட்களை பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் சேர்த்தது.

* இந்த முடிவின் மூலம் விற்பனைக்கு வரும் வனப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சிறிய ரகப்பொருள்களின் எண்ணிக்கை 50 லிருந்து 73 ஆக அதிகரித்தன.

* "தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உதவித் தொகைத் திட்டங்களின் மூலம் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக" ஸ்கோச் தங்க விருதை பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் பெற்றது.

* பழங்குடியினர் நல அமைச்சகம் ஃபேஸ்புக்குடன் இணைந்து உருவாக்கி உள்ளகோல்” (ஆன்லைனில் தலைவர்களாக செயல்படுதல்) என்ற திட்டத்தை மத்திய பழங்குடியினர் நல அமைச்சர் திரு அர்ஜுண் முண்டா புதுதில்லியில் இணைய வழி வாயிலாக மே மாதம் தொடங்கி வைத்தார்

* கோல் திட்டமானது பழங்குடியின இளைஞர்களுக்கு டிஜிட்டல் முறையில் வழிகாட்டுதலைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதுடிஜிட்டல் முறையில் செயல்படும் இந்தத் திட்டமானது பழங்குடியின இளைஞர்களிடையே மறைந்துள்ள திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு உந்து சந்தியாக விளங்கும்மேலும் இது அவர்களின் ஆளுமையை வளர்ப்பதோடு அவர்களது சமூகத்தின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கும் உதவும் வகையில் இருக்கும்.

* “ஸ்வஸ்தயாஎன்ற பழங்குடியினர் சுகாதாரம், ஊட்டச்சத்து போர்ட்டல், அலேக் என்ற சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த -செய்தி இதழ், தேசிய அயல்நாட்டு போர்ட்டல் மற்றும் தேசியப் பழங்குடியினர் கல்வி உதவித்தொகை போர்ட்டல் உள்ளிட்ட தொடர்ச்சியான முன்னெடுப்பு நடவடிக்கைகளை பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் அறிவித்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685572

-----



(Release ID: 1685643) Visitor Counter : 331


Read this release in: English , Hindi , Manipuri , Punjabi