தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

100 படுக்கைகளுடன் கட்டப்படவுள்ள இஎஸ்ஐசி மருத்துவமனைக்கு திரு சந்தோஷ் குமார் கங்க்வார் அடிக்கல் நாட்டினார்

இடுகை இடப்பட்ட நாள்: 21 DEC 2020 6:17PM by PIB Chennai

ஓம்புரா, பட்காமில் நூறு படுக்கைகளுடன் கட்டப்படவுள்ள தொழிலாளார் அரசு காப்பீட்டு நிறுவன (இஎஸ்ஐசி) மருத்துவமனைக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு சந்தோஷ் குமார் கங்க்வார் அடிக்கல் நாட்டினார்

ஜம்மு காஷ்மிர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா இந்த விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்றார். ஐந்து ஏக்கரில், நான்கு மாடிகளுடன் கட்டப்படவுள்ள இந்த மருத்துவமனை 23 சிறப்பு பிரிவுகளிலும், மூன்று உயர் சிறப்பு பிரிவுகளிலும் சேவைகளை வழங்கும்.

ரூ 160 கோடி செலவில் அடுத்த ஒன்றரை வருடங்களில் இம்மருத்துவமனை கட்டி முடிக்கப்படும். பதிவு செய்து கொண்டுள்ள காப்பீட்டு உறுப்பினர்களை மட்டுமன்றி, பொது மக்களும் இங்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

நிகழ்ச்சியில் பேசிய திரு கங்க்வார், கடந்த 66 வருடங்களாக சேவையாற்றி வரும் தொழிலாளார் அரசு காப்பீட்டு நிறுவனம், நாட்டிலுள்ள 80 சதவீதத்திற்கும் அதிகமான மாவட்டங்களில் சேவையாற்றி வருவதாக குறிப்பிட்டார்.

சமூக பாதுகாப்பு வசதியில் இருந்து எந்தவொரு குடுமகனும் விடுபட்டுவிடக் கூடாது என்று அமைச்சர் கூறினார். தற்போதைய கொவிட்-19 நெருக்கடியை எதிர்கொள்வதில் முக்கிய பங்காற்றிய தொழிலாளார் அரசு காப்பீட்டு நிறுவனத்தை அவர் பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682424

**********************


(வெளியீட்டு அடையாள எண்: 1682458) வருகையாளர் எண்ணிக்கை : 174
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , हिन्दी