மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

ஐஐஐடி பாகல்பூரின் நிரந்தர வளாகத்திற்கான அடிக்கல்லை மத்திய கல்வி அமைச்சர் நாட்டினார்

இடுகை இடப்பட்ட நாள்: 21 DEC 2020 5:53PM by PIB Chennai

ஐஐஐடி பாகல்பூரின் நிரந்தர வளாகத்திற்கான அடிக்கல்லை மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' காணொலி மூலம் இன்று நாட்டினார்.

கல்வி கட்டிடம், நிர்வாக கட்டிடம், வகுப்பறைகள், கணினி மையம், நூலகம், பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மையம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள், ஆசிரியர்களுக்கான குடியிருப்புகள் போன்ற பல்வேறு வசதிகள் புதிய நிரந்தர வளாகத்தில் இடம் பெறும்.

இதற்கிடையே, தாம் உட்பட புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய இந்தி புத்தகங்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபே இந்த விழாவில் வெளியிட்டார்.

பிகார் மாநில கல்வி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அசோக் சவுத்ரி, பாகல்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு அஜய் மண்டல், மத்திய உயர் கல்வி அமைச்சகத்தின் செயலாளர் திரு அமித் காரே மற்றும் ஐஐஐடி பாகல்பூரின் இயக்குநர் பேராசிரியர் அரவிந்த் சவுபே ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682418

**********************


(வெளியீட்டு அடையாள எண்: 1682452) வருகையாளர் எண்ணிக்கை : 144
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Telugu