திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

உத்தரப் பிரதேசம் சந்தௌலி மற்றும் வாரணாசியில் பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு அங்கீகாரம் : திறன் மேம்பாடு அமைச்சகம் ஏற்பாடு

Posted On: 21 DEC 2020 5:33PM by PIB Chennai

உத்தரப் பிரதேசம் சந்தௌலி மற்றும் வாரணாசியில் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை அங்கீகரித்து, திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் சான்றிதழ் வழங்கியுள்ளது.

திறன் மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்தும், மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம் பயிற்சி பெறும் தொழிலாளர்களை அங்கீகரிக்கும் சிறப்பு திட்டத்தை(ஆர்பிஎல்) உத்தரப் பிரதேசம் சந்தௌலி மற்றும் வாரணாசி மாவட்டங்களில் பஞ்சாயத்து ராஜ் துறையுடன் இணைந்து  நடத்தி வருகிறது.  திறன் மேம்பாடு மற்றும் தொழிமுனைவு அமைச்சகத்தின் சங்கல்ப் திட்டத்தின் கீழ் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

தேசிய திறன் மேம்பாட்டு கார்பரேஷன் இத்திட்டத்தை அமல்படுத்தியது. இந்த பயிற்சி முகாம்கள் கடந்த அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது. இதில் 2,250 பேர் பதிவு செய்தனர். இதற்கு கட்டணம் இல்லை.

பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 900 பணியாளர்களுக்கு மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவு அமைச்சர் டாக்டர் மகேந்திரநாத் மாண்டே காணொலி காட்சி மூலம் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இங்கு பயிற்சி பெற்ற தச்சு தொழிலாளி சஞ்சய் விஸ்வகர்மா என்பவர் கூறுகையில், ‘‘நான் 15 ஆண்டுகளாக தச்சு தொழில் செய்கிறேன். தற்போது  எனது திறமைக்கு அரசு அளித்துள்ள அங்கீகார சான்றிதழ் மூலம், எனக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும்’’ என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682409

**********************



(Release ID: 1682447) Visitor Counter : 167


Read this release in: English , Urdu , Hindi , Punjabi