உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் இதர அமைப்புகளோடு கூட்டறிக்கை மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் உணவு பதப்படுத்துதல் அமைச்சகம் கையெழுத்திட்டது

Posted On: 18 DEC 2020 8:19PM by PIB Chennai

மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்துடன் கூட்டறிக்கை ஒன்றிலும், பல்வேறு அமைப்புகளோடு ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது

இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பு (டிரிஃபெட்), இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு (ஐகார்), தேசிய பட்டியல் வகுப்பினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (என் எஸ் எஃப் டி சி), தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (நாஃபெட்) மற்றும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (என் சி டி சி) ஆகியவை மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட அமைப்புகளாகும்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு தாவர் சந்த் கெலாட், பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா மற்றும் உணவுப் பதப்படுத்துதல் தொழில்கள் இணை அமைச்சர் திரு ராமேஸ்வர் தேலி ஆகியோர் இந்நிகழ்வின் போது உடனிருந்தனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681827

**********************


(Release ID: 1681846)
Read this release in: English , Urdu , Hindi