வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம்: நவம்பர் 2020

Posted On: 15 DEC 2020 6:13PM by PIB Chennai

ஏப்ரல்-நவம்பர் 2020-21*-இல் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியின் மதிப்பு (பொருள்கள் மற்றும் சேவைகள் இணைந்து) 304.25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இதே காலத்துடன் ஒப்பிடும் போது (-)14.03 சதவீதம் என்னும் விகிதத்தில் எதிர்மறை வளர்ச்சியை இது காட்டுகிறது.

ஏப்ரல்-நவம்பர் 2020-21*-இல் ஒட்டுமொத்த இறக்குமதியின் மதிப்பு 290.66 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இதே காலத்துடன் ஒப்பிடும் போது (-)29.96 சதவீதம் என்னும் விகிதத்தில் எதிர்மறை வளர்ச்சியை இது காட்டுகிறது. 

 குறிப்பு: சேவைகள் துறைக்காக இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய தரவுகள் அக்டோபர் 2020-க்கு உரியவை ஆகும்.

நவம்பர் 2020-க்கான தரவுகள் மதிப்பீடுகளே ஆகும். இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்தடுத்த வெளியீடுகளை ஆதாரமாகக் கொண்டு அவை திருத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680830



(Release ID: 1680916) Visitor Counter : 160


Read this release in: English , Urdu , Hindi