விவசாயத்துறை அமைச்சகம்
காரீப் நெல் கொள்முதல்: 41.04 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.70,937.38 கோடி
प्रविष्टि तिथि:
14 DEC 2020 6:00PM by PIB Chennai
நடப்பு காரீப் சந்தைப் பருவத்தில், நெல் கொள்முதலுக்காக, சுமார் 41.04 லட்சம் விவசாயிகளுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.70,937.38 கோடி வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு காரிப் சந்தைப் பருவத்தில் தமிழகம், பஞ்சாப் உட்பட பல மாநிலங்களில் நெல் கொள்முதல் சுமுகமாக நடக்கிறது. கடந்த 13ம் தேதி வரை மொத்தம் 375.72 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டதைவிட 20.92 சதவீதம் அதிகம்.
மேலும், மாநிலங்கள் விருப்பப்படி, 48.11 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கடந்த 13ம் தேதி வரை 1,58,387.33 மெட்ரிக் டன் பாசிப் பயறு, உளுந்து, நிலக்கடலை, சோயா பீன்ஸ் ஆகியவற்றை அரசு ரூ.850.89 கோடிக்கு கொள்முதல் செய்துள்ளது.
இதேபோல், 5,089 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய், தமிழகம் உட்பட பல மாநில விவசாயிகளிடமிருந்து ரூ.52.40 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680576
-----
(रिलीज़ आईडी: 1680633)
आगंतुक पटल : 147