சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயாவில் கலா உத்சவ்: டிசம்பர் 9 & 10
Posted On:
08 DEC 2020 5:07PM by PIB Chennai
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய உயர்நிலைப் பள்ளிக்கல்வி இயக்கம் நடத்தும் மண்டல அளவிலான கலா உத்சவ் 2020 நிகழ்ச்சி, வரும் 9 (நாளை), 10 தேதிகளில் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியை கேந்திரிய வித்யாலயா சங்கதனின் சென்னை மண்டல துணை ஆணையர் டாக்டர் திருமதி எம். ராஜேஸ்வரி தொடங்கி வைப்பார். கேந்திரிய வித்யாலயா சங்கதனின் சென்னை மண்டல உதவி ஆணையர் திரு பிரம்மானந்தம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.
இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பாட்டு- கர்நாடக சங்கீதம்; பாரம்பரிய இசை, வாத்திய இசை, பாரம்பரிய நடனம், நாட்டுப்புற நடனம், காட்சிக் கலை (2, 3 பரிமாணம்) உள்ளிட்ட போட்டிகள் பள்ளி அளவிலும், மண்டல அளவிலும் நடைபெறும். மண்டல அளவிலான போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படுவோர், தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலைத்திறனை வெளிப்படுத்தி, அதன் வாயிலாகக் கலைக்கல்வியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கலா உத்சவ் நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.
இந்த தகவல், கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வர் டாக்டர் எம் மாணிக்கசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
******
(Release ID: 1679117)
Visitor Counter : 120