சுரங்கங்கள் அமைச்சகம்
சுரங்கத் துறையின் உண்மையான திறனை உணர பல கட்டமைப்பு சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது-மத்திய அமைச்சர் தகவல்
प्रविष्टि तिथि:
02 DEC 2020 5:19PM by PIB Chennai
சுரங்கத்துறையின் உண்மையான திறனை உணர, பல கட்டமைப்பு சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது என மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி கூறினார்.
உலகளாவிய சுரங்க உச்சி மாநாடு மற்றும் சர்வதேச சுரங்க இயந்திரங்கள் கண்காட்சி நிகழ்ச்சியில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி கலந்து கொண்டு பேசியதாவது:
சுரங்க ஆராய்ச்சியில் தனியார் துறை பங்களிப்பை அதிகரிக்கவும், ஆய்வு முதல் உற்பத்தி வரை சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான விதிமுறைகளை மாற்றியமைக்கவும், கட்டமைப்பு சீர்திருத்தங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டு வருகிறது. இது நாட்டில் கனிம வளங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும். கடந்த மார்ச் மாதம் பல சுரங்கங்களின் குத்தகை காலம் முடிவடைந்தது. அவசர சட்டம் மூலம், அந்த சுரங்கங்கள் புதிய குத்தகைக்கு உடனடியாக விடப்பட்டன. கனிம வளங்களின் தடையற்ற உற்பத்திக்கு இது மிகப் பெரிய நடவடிக்கை. சமீபத்தில் அதிகளவிலான இரும்புத்தாது சுரங்கங்களின் ஏலத்தை ஒடிசா வெற்றிகரமாக முடித்தது. கனிம சுரங்கங்களின் ஏலம் முழு வெற்றியடையவும், அவைகள் மாநில அரசுகளுக்கு வருவாய் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677691
**********************
(रिलीज़ आईडी: 1677764)
आगंतुक पटल : 135