புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
2020-21-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான (ஜூலை-செப்டம்பர்) உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பீடு
Posted On:
27 NOV 2020 5:30PM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்டமிடுதல் அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம், 2020-21-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான (ஜூலை-செப்டம்பர்) உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.
நிலை (2011-12) மற்றும் தற்போதைய விலைகள் ஆகிய இரண்டின் அடிப்படையிலும், ஜிடிபியின் முந்தைய செலவு அம்சங்களின் காலாண்டு மதிப்பீடுகளுடன் இது வெளியிடப்பட்டுள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்று பரவுவதை தடுப்பதற்காக பொருளாதார நடவடிக்கைகளின் மீது முதலாம் காலாண்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. படிப்படியாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும், அவற்றின் பாதிப்பு பொருளாதார நடவடிக்கைகளில் இருக்கிறது.
தரவுகளும் முழுமையாகக் கிடைக்காததால், அவை கிடைத்தவுடன் மதிப்பீடுகளில் மாற்றம் செய்யப்படும். அக்டோபர்-டிசம்பர், 2020-க்கான (2020-21-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு) ஜிடிபி மதிப்பீடுகள 2021 பிப்ரவரி 26 அன்று வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676486
*******************
(Release ID: 1676580)
Visitor Counter : 299