சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தேசிய நெடுஞ்சாலைகளுக்கான நில கையகப்படுத்தலை துரிதப்படுத்த வேண்டும்: திரு நிதின் கட்கரி
இடுகை இடப்பட்ட நாள்:
26 NOV 2020 7:13PM by PIB Chennai
சுங்கச்சாவடி ஒப்பந்தங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணங்களை நீக்க வேண்டும், தேசிய நெடுஞ்சாலைகளுக்கான நில கையகப்படுத்தலை துரிதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உத்தரப் பிரதேச அரசுக்கு மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி இன்று வைத்தார்.
ரூபாய் 7500 கோடி மதிப்புள்ள 16 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு உத்தரப் பிரதேசத்தில் அடிக்கல் நாட்டி, திறந்து வைத்து திரு கட்கரி, கடந்த ஆறு வருடங்களில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
காணொலி மூலம் நடைபெற்ற இந்த விழாவிற்கு உத்தரப் பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் தலைமை வகித்தார். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) வி கே சிங், உத்திரப் பிரதேச துணை முதல்வர் திரு கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் அம்மாநிலத்தின் அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இன்று அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் மூலம் 505 கிலோமீட்டர்களுக்கு சாலைகள் அமைக்கப்படும். உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு இந்த சாலைகள் வழிவகுக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676146
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1676284)
வருகையாளர் எண்ணிக்கை : 192