புவி அறிவியல் அமைச்சகம்
புதுச்சேரி-தமிழகம் இடையே கரை கடந்தது அதி தீவிர புயல் ‘நிவர்’ புயலாக வலுவிழந்து காற்றழுத்தமாக மாறுகிறது
Posted On:
26 NOV 2020 5:21PM by PIB Chennai
அதி தீவிர புயல் ‘நிவர்’ புதுச்சேரி-தமிழகம் இடையே கரை கடந்து, நேற்று காலை தீவிர புயலாக வலுவிழந்தது. இது படிப்படியாக ஆழ்ந்த காற்றழுத்தமாகவும், காற்றழுத்தமாகவும் வலுவிழக்கும் என இந்திய வானிலைத் துறை கூறியுள்ளது.
தென்மேற்கு வங்காள வரிகுடாவில் நிலை கொண்டிருந்த ‘நிவர்’ புயல் வடமேற்கு நோக்கி நகர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதியில் நவம்பர் 25ம் தேதி 23.30 மணி முதல் நவம்பர் 26ம் தேதி 2.30 மணி வரை கரை கடந்தது. அப்போது மணிக்கு 120 கி.மீ முதல் 145 கி.மீ வரை காற்று வீசியது.
இது தொடர்ந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து, தமிழகத்தின் வட கடலோர பகுதியில் நவம்பர் 26ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் தீவிர புயலாகவும், காலை 8.30 மணியளவில் புயலாகவும் வலுவிழந்தது.
இந்த புயல் தொடர்ந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாகவும், அதற்கடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்தமாகவும் வலுவிழக்கும்.
இதன் காரணமாக வட தமிழகம், ஆந்திர பிரதேசத்தின் சித்தூர், கர்னூல், பிரகாசம், கடப்பா மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு தெலங்கானா பகுதியில் பல இடங்களில் மழை பெய்யும், ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும்.
தென்மேற்கு வங்காள விரிகுடா, வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் கடல் தொடர்ந்து கொந்தளிப்பாக காணப்படும். அடுத்த 12 மணி நேரத்துக்கு, மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்;
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676078
-----
(Release ID: 1676188)
Visitor Counter : 142