பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

2020 அக்டோபர் மாதத்துக்கான உற்பத்தி அறிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 25 NOV 2020 3:51PM by PIB Chennai

இந்தியாவில் நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட கச்சா எண்ணெய் உற்பத்தி குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அக்டோபர் மாதத்தில், கச்சா எண்ணெய், 2567.70 டிஎம்டி உற்பத்தி செய்யப்பட்டது. இது இலக்கை விட 7.10 சதவீதமும், 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தை விட 6.24 சதவீதமும் குறைவாகும். 2020 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி 17940.49 டிஎம்டி ஆகும். இது இலக்கை விட 5.0 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு இதே மாதத்தின் உற்பத்தியை விட இது 6.12 சதவீதம் குறைவாகும்.

இயற்கை எரிவாயு,  2020 அக்டோபர் மாதத்தில் 2418.88 எம்எம்எஸ்சிஎம் உற்பத்தி செய்யப்பட்டது. இது மாத இலக்கை விட 18.20 சதவீதமும், 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தை விட 8.41 சதவீதமும் குறைவாகும். 2020 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மொத்த இயற்கை எரிவாயு உற்பத்தி 16372.77 எம்எம்எஸ்சிஎம் ஆகும். இது இலக்கை விட 13.90 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு இதே மாதத்தின் உற்பத்தியை விட இது 12.19 சதவீதம் குறைவாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675620

 

*******************


(வெளியீட்டு அடையாள எண்: 1675695) வருகையாளர் எண்ணிக்கை : 207
இந்த வெளியீட்டை படிக்க: Manipuri , English , हिन्दी