சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

டிஜிடல் ஆயுள் சான்றிதழ்; தொற்று காலத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு இந்தியா போஸ்ட் ஆதரவுக்கரம்

Posted On: 13 NOV 2020 2:36PM by PIB Chennai

மூத்த குடிமக்கள், வெளியே, குறிப்பாக கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்ல முடியாததால்கோவிட்-19 தொற்று பொது முடக்கம்அவர்களைப் பெரிதும் பாதித்துள்ளதுஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுள் சான்றிதழை வங்கிகளுக்கு கொடுக்க வேண்டும்கோவிட்-19 தொற்றுஓய்வூதியதாரர்கள்அவற்றைக் கொடுக்க வங்கிகளுக்கு செல்ல இயலாமல் செய்து விட்டதுஇந்தியா போஸ்ட் வழங்கும் ஆதார் அடிப்படையிலான  முறையின் மூலம் ஆயுள் சான்றிதழ் கொடுக்கும் வசதியை ஓய்வூதியதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கி (ஐபிபிபிடிஜிடல் ஆயுள் சான்றிதழை (டிஎல்சிஉருவாக்கும்இந்தச் சேவை வசதி ஐபிபிபி வாடிக்கையாளர்களுக்கும்மற்றவர்களுக்கும் வழங்கப்படுகிறதுடிஎல்சி சேவைகளை இந்தியா போஸ்ட் கவுண்டர்களில் ( மைக்ரோ ஏடிஎம் மூலம்அல்லது வீட்டுக்கு வரும் தபால்காரர் மூலம் பெற்றுக் கொள்ளலாம்ஓய்வூதியதாரர்களின் பிரமான் ஐடி உருவாக்கப்பட்டவுடன்டிஎல்சி-யை https://jeevanpramaan.gov.in என்ற தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்ஒவ்வொரு முறையும் வெற்றிகரமாக உருவாக்கப்படும் சான்றிதழுக்கு  டிஎல்சி சேவை கட்டணமாக  ரூ.70 (GST/ CESS/ DSB உள்ளடங்கியதுவசூலிக்கப்படும்ஐபிபிபி மற்றும் இதர வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கு வந்து அளிப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.

ஓய்வூதியதாரர்கள்ஓய்வூதியம் விடுவிக்கும் முகமையிடம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க இந்த அஞ்சல் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்மூத்த குடிமக்கள் கோவிட் தொற்று காலத்தில் வங்கிகளுக்கு செல்ல இயலாத சூழல் நிலவுவதால்வீட்டிலிருந்தபடியேஆதார் அடிப்படையிலான முறையைப் பயன்படுத்தி ஆயுள் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.

திருச்சிராப்பள்ளி மற்றும் அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் தபால்காரரையோ அல்லது அருகில் உள்ள அஞ்சலகங்களையோ அணுகிஇந்தத் திட்டம் பற்றிய மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம்இதற்காக ஜீவன் பிரமான் தளத்தை இயக்கி வருகிறதுஎனவேஆயுள் சான்றிதழை நேரடியாகச் சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு ஓய்வூதியதாரர் செல்ல வேண்டியதில்லைடிஜிடல் ஆயுள் சான்றிதழை உருவாக்க ஆதார் இணைந்த பயோமெட்ரிக் எந்திர முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்டிஎல்சி முறை என்பது ஓய்வூதியதாரர்களுக்கு மிகவும் பயன்படும்மத்தியமாநில அரசுகள் அல்லது பிற அரசு அமைப்புகளின் ஓய்வூதியதாரர்கள் இந்த வசதி மூலம் பயனடையலாம்ஓய்வூதியதாரர்களுக்கு ஆதார் எண்ணும்கைபேசி எண்ணும் தேவையாகும்ஓய்வூதியதாரரான திருமதி குமாரி கிருஷ்ணன்கோவிட்-19 தொற்று காலத்தில் வங்கிக்கு செல்வது அபாயகரமானது என்பதால்தன்னால் வங்கிக்கு செல்ல இயலவில்லை என்று கூறினார்டிஎல்சி முறை உண்மையிலேயே ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கக்கூடியதாகும்வீட்டிலிருந்தவாறே அதைப்பெற்றுதங்கள் வங்கிகளில் டிஜிடல் மூலம் சமர்ப்பிக்கலாம்.

பயணம் செய்ய இயலாதசுகாதாரக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு இந்த டிஎல்சி உண்மையிலேயே வரப்பிரசாதமாகும்கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில்ஓய்வூதியதாரர்களுக்கு உதவும் வகையில் இந்தியா போஸ்ட்டிஜிடல் ஆயுள் சான்றிதழ் சேவையை வழங்கி வருகிறது.

 

*****    
 
 



(Release ID: 1672650) Visitor Counter : 114


Read this release in: English