சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

பணியாளர் ஓய்வூதியத் திட்டம் 1995-இன் ஓய்வூதியர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்காக பல்வேறு வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

Posted On: 07 NOV 2020 7:20PM by PIB Chennai

தற்போதைய கொவிட்-19 சூழலில், பணியாளர் ஓய்வூதியத் திட்டம் 1995-இன் ஓய்வூதியதாரர்கள் மின்னணு வாயிலாக உயிர்வாழ் சான்றிதழை சமர்பிப்பதற்கு அவசரம் காட்டுவதைத் தவிர்க்கும்படி தொழிலாளர்  வருங்கால வைப்புநிதி அமைப்புவேண்டுகோள் விடுத்துள்ளது.

புதிய வழிகாட்டுதல்களின்படி ஓய்வூதியதாரர்களுக்கான உயிர் வாழ் சான்றிதழை (ஜீவன் பிரமான் பத்திரம்- ஜேபிபி) ஆண்டு முழுவதும் சமர்பிக்கலாம். இது பதிவு செய்த தேதியில் இருந்து ஒரு ஆண்டுக்கு செல்லுபடியாகும். 2020-ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியத் தொகை உத்தரவு வழங்கப்பட்ட ஓய்வூதியதாரர்கள் ஒரு ஆண்டு பூர்த்தியாகாமல் ஜேபிபி-யை பதிவேற்றம் செய்யத் தேவையில்லை.

கடந்த ஆண்டுகளைப் போலவே, ஓய்வூதியதாரர்களுக்கான உயிர் வாழ் சான்றிதழ் பதிவுக்காக வங்கிக் கிளைகளையும் அணுகலாம். ஓய்வூதியதாரர்கள் வங்கிக் கிளைகளுக்குச் செல்லும்போது தங்களது ஓய்வூதியத் தொகை உத்தரவு எண், ஆதார் அட்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கான உயிர் வாழ் சான்றிதழை சமர்பிக்க அருகில் உள்ள பொது சேவை மையங்களையும் ஓய்வூதியதாரர்கள் அணுகலாம்.

இந்த முகமைகள் தவிர, தபால் துறையின் இந்திய தபால் அலுவலக பேமெண்ட் வங்கி, ஓய்வூதியதாரர்களின் வீடுகளுக் கே சென்று இந்த சேவையை வழங்கத் தொடங்கி இருக்கிறது. இதற்கான தகவல்களைப் பெறுவதற்கு அருகில் உள்ள தபால் அலுவலகங்களை ஓய்வூதியதாரர்கள் அணுகலாம்.

மேற்கண்ட தகவல்களை, திரு ரிதுராஜ் மேதி, மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர்-1, மண்டல அலுவலகம், சென்னை (வடக்கு) & மண்டல அலுவலகம், சென்னை (தெற்கு), செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

**********************

 



(Release ID: 1671077) Visitor Counter : 87


Read this release in: English