சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநராக திரு.எம்.அண்ணாதுரை இன்று பொறுப்பேற்பு
Posted On:
04 NOV 2020 6:22PM by PIB Chennai
சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராக திரு எம்.அண்ணாதுரை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்திய தகவல் பணி அதிகாரியான திரு.அண்ணாதுரை, இதற்கு முன்பு சென்னை பொதிகை தொலைக்காட்சி செய்திப் பிரிவு இயக்குநர், மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ளார்.
நிதி, சட்டம், செய்தி ஒலிபரப்பு, ஜவுளித் துறைகளில் அமைச்சர்களின் தனிச் செயலாளராகவும் சிறப்புப் பணி அலுவலராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
திரு.அண்ணாதுரை, 1995-ஆம் ஆண்டு குடிமைப்பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று இந்திய தகவல் பணியில் இணைந்தார்.

(Release ID: 1670122)
Visitor Counter : 179