நிதி அமைச்சகம்

மத்திய அரசின் பங்குகளின் விற்பனைக்கான ஏலம் பற்றிய அறிவிப்பு

Posted On: 02 NOV 2020 5:57PM by PIB Chennai

மத்திய அரசின் பங்குகளை ஏலம் மூலம் விற்பது குறித்த அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி:

(i) 'புதிய அரசு பங்கு, 2022' ரூபாய் 2,000 கோடிக்கு ஆதாயம் அடிப்படையிலான ஏலத்தின் மூலம் விற்கப்படும் (வெளியீடு).

(ii)  'புதிய அரசு பங்கு, 2025' ரூபாய் 11,000 கோடிக்கு ஆதாயம் அடிப்படையிலான ஏலத்தின் மூலம் விற்கப்படும் (வெளியீடு).

(iii) '5.77% அரசு பங்கு, 2030' ரூபாய் 9,000 கோடிக்கு விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் விற்கப்படும் (மறு-வெளியீடு).

 (iv) '6.80% அரசு பங்கு, 2060' ரூபாய் 7000 கோடிக்கு விலை அடிப்படையிலான ஏலம் மூலம் விற்கப்படும் (மறு-வெளியீடு).

மும்பைக் கோட்டையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகத்தில் நவம்பர் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்த ஏலங்கள் நடத்தப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் நவம்பர் 9-ஆம் தேதி (திங்கள்) அன்று பணம் செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669515

******

(Release ID: 1669515)


(Release ID: 1669625) Visitor Counter : 129


Read this release in: Hindi , Manipuri , English , Urdu