வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
செப்டம்பர் 2020-இல் எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டு எண்கள் (அடிப்படை: 2011-12 = 100)
Posted On:
29 OCT 2020 5:00PM by PIB Chennai
பொருளாதார ஆலோசகர் அலுவலகம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை 2020 செப்டம்பர் மாதத்திற்கான எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டு எண்ணை வெளியிடுகிறது.
2020 செப்டம்பர் மாதத்தில் எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த குறியீடு 119.7 ஆக இருந்தது, இது 2019 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 0.8 (தற்காலிக) சதவீதம் குறைந்துள்ளது. 2020-21 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஒட்டுமொத்த வளர்ச்சி -14.8 சதவீதம் ஆகும்.
ஜூன் 2020-க்கான எட்டு முக்கிய தனி தொழில்களில் குறியீட்டு எண்ணின் இறுதி வளர்ச்சி விகிதம் -1 2 .4 சதவீதம் ஆக திருத்தப்பட்டுள்ளது.
தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் (IIP) சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் மதிப்பில் எட்டு முக்கிய தனி தொழில்கள் 40.27 சதவீதம் உள்ளன. வருடாந்திர / மாதாந்திர குறியீட்டு மற்றும் வளர்ச்சி விகிதத்தின் விவரங்கள் இணைப்பில் வழங்கப்படுகின்றன.
எட்டு முக்கிய தொழில்களில் (ஒட்டுமொத்த) மாதாந்திர குறியீட்டு எண் மற்றும் வளர்ச்சி விகிதத்தின் விவரங்கள் இணைப்பில் வழங்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668437
----
(Release ID: 1668950)