நிதி அமைச்சகம்

மத்திய அரசு பங்குகள் ஏல அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 19 OCT 2020 5:45PM by PIB Chennai

 2022ம் ஆண்டுக்கான அரசு பங்குகளில் 5.09 சதவீதத்தை ரூ.3000 கோடிக்கும், 2025ம் ஆண்டுக்கான பங்குகளில் 5.22 சதவீதத்தை ரூ.12 ஆயிரம் கோடிக்கும், 2030ம் ஆண்டுக்கான பங்கில் 5.77 சதவீதத்தை ரூ.9 ஆயிரம் கோடிக்கும், 2060ம் ஆண்டுக்கான பங்கில் 6.8 சதவீதத்தை ரூ.7 ஆயிரம் கோடிக்கும் ஏலம் விடுவதற்கான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஏலங்கள் மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் அக்டோபர் 23ம் தேதி நடைபெறும்.

போட்டி அல்லாத முறையில், அரசு பங்குகளை ஏலம் எடுக்கும் திட்டத்தின் படி, பங்கு விற்பனையில் 5 சதவீதம் வரை, தகுதியான நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். போட்டி மற்றும் போட்டி அல்லாத முறையில் ஏலம் கேட்க விரும்புவர்கள், தங்கள் விண்ணப்பத்தை ரிசர்வ் வங்கியின் இ-கியூபர்  முறையில் அக்டோபர் 23ம் தேதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665843


(வெளியீட்டு அடையாள எண்: 1666054) வருகையாளர் எண்ணிக்கை : 151
இந்த வெளியீட்டை படிக்க: Punjabi , हिन्दी , Manipuri , Urdu , English