பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்ததற்காக இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பு (Trifed ) சிறப்பாக செயல்பட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கான தேசிய விருதினை (மெய்நிகர் பதிப்பு) வென்றுள்ளது.
இடுகை இடப்பட்ட நாள்:
14 OCT 2020 4:38PM by PIB Chennai
நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் விடாமுயற்சியுடன் நிர்வாக இயக்குனர் பிரவீர் கிருஷ்ணா தலைமையிலான பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பு (டிரைஃபெட்) குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களின் தாராளமய செயல்கள் மற்றும் முயற்சிகளுக்கு மதிப்பு மிக்க அங்கீகாரமாக கடந்த 2020 அக்டோபர் 14-ல் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பாக செயல்பட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கான விருதை (மெய்நிகர் பதிப்பாக)பெற்றுள்ளது. இந்த குழு ஒட்டுமொத்தமாக மூன்று விருதுகளை வென்றுள்ளனர். முன்மாதிரியாக ஊக்கமளிக்கும் தலைமைத்துவத்துடன் பணியாற்றிய தலைமை செயல் அதிகாரி பிரவீர் கிருஷ்ணாவுக்கு ஆண்டின் சிறந்த சிஇஓ மற்றும் தொலைநோக்கு தலைமைத்துவத்துவத்துக்கான விருது என்ற இரண்டு பிரிவுகளில் தனிநபர் விருதுகள் கிடைத்துள்ளன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்ததற்காக குழுவுக்கான கூட்டு விருதும் கிடைத்துள்ளது.
தற்சார்பு இந்தியா மற்றும் சுயசார்பு பொருளாதாரம் எனும் நாட்டின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து முக்கிய பணியாற்றி வரும் நிறுவனங்களின் தலைவர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் ஆகியவை மேற்கொள்ளும் சிறப்பான முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கான தேசிய விருது நிகழ்வை உலக மனித வளமேம்பாடு(HRD) காங்கிரஸ் நடத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664357
*******
(Release ID: 1664357)
(வெளியீட்டு அடையாள எண்: 1664645)
வருகையாளர் எண்ணிக்கை : 165