சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

திக்க்ஷா வலைதளம்- ஒரு நாடு ஒரே டிஜிட்டல் தளம் தமிழகத்தில் திக்க்ஷாவின் கீழ் 73.28 லட்சம் பயிற்சி அமர்வுகள் நடைபெற்றுள்ளன

Posted On: 13 OCT 2020 6:02PM by PIB Chennai

கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்தால்  அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக, மார்ச் மாத கடைசியில் இருந்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன. பெருந்தொற்று பரவி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் கல்வி நிறுவனங்களைத் திறக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளன. பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி போதித்து வருகின்றன. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் www.diksha.gov.in  என்ற வலைதளம், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருக்கு கல்வி குறித்த விவரங்களை அளிக்கும் தனித்துவமான வலைதளமாக விளங்குகிறது. அது அரசின் ஒரு நாடு ஒரே டிஜிடல் தளம் என்னும் நோக்கைப் பிரதிபலிக்கிறது.

 

நவீன கால ஆசிரியர்கள் டிஜிடல் அறிவைப் பெற்றுள்ளதால், திக்‌ஷா அவர்களுக்கு தேசிய டிஜிடல் கட்டமைப்பாக செயல்படுகிறது.

திக்‌ஷா வலைதளம், ஆசிரியர்களுக்கு கல்வியில் தீர்வுகளுக்கு வழி வகை செய்கிறது. ஆசிரியர்கள் தாங்களாகவே கற்றுக்கொண்டு பயிற்சி பெற்று மதீப்பீடு செய்ய இது உதவுகிறது. பயிற்சி அம்சத்தை உருவாக்குதல், சிறப்பு குறிப்புகள், வகுப்பு ஆதாரங்கள், மதிப்பீட்டு உதவி, செய்தி, அறிவிப்பு ஆகியவற்றில் ஆசிரியர்களுக்கு இது உதவுவதுடன், ஆசிரியர் சமுதாயத்துடன் தொடர்பையும் ஏற்படுத்த பயன்படுகிறது. மாநிலங்கள், அரசு அமைப்புகள் மற்றும் தனியார் அமைப்புகளும், தங்களது இலக்குகள், தேவைகள், திறன்கள் அடிப்படையில் திக்‌ஷாவைப் பயன்படுத்தி ஆசிரியர்களை ஒருங்கிணைக்க முடியும். வகுப்பறை ஆதாரங்கள், ஆசிரியர் பயிற்சி அம்சம், மதிப்பீட்டு உதவிகள், ஆசிரியர் வரலாறு, செய்திகள், அறிவிப்பு ஆகிய திக்‌ஷாவின் அம்சங்களை அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆசிரியர் பயிற்சி படிப்புகள், பாடத் திட்டங்கள், கருத்தியல் வீடியோக்கள், ஆசிரியர்களுக்கான மதிப்பீட்டு பணித்தாள்கள் போன்ற கற்பித்தல் ஆதாரங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்களது வலிமை, முன்னேற்றம் ஆகியவற்றைக் கண்டறியலாம். 

 

ஆசிரியர்கள் தங்களது கைபேசி, மடிக்கணினி மற்றும் இதர உபகரணங்களில்  இந்த விவரங்களை எங்கிருந்து வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  இந்த விவரங்கள், உள்ளூர் மொழிகள், பாடத்திட்டத்துக்கு ஏற்ப நெறிப்படுத்தப்படும். தமிழகத்தில் இதுவரை, 73.28 லட்சம் பயிற்சி அமர்வுகள் திக்‌ஷாவின் கீழ், நடைபெற்று, பிரபலமடைந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த மூத்த ஆசிரியர் திருமதி ஆனந்தி, ஆன்லைன் கல்வி  மூலம் மாணவர்கள் வகுப்புகளைத் தவற விடுவதில்லை என்று கூறினார். ஜூம் அல்லது கூகுள் சந்திப்பு மூலம் ஆசிரியர்களிடம் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு பதில் பெறுகின்றனர். தேசிய ஆசிரியர் தளத்தில், ஆசிரியர்களுக்கு வகுப்பறைகள், மேம்பாட்டு வழிமுறைகள், மதிப்பீடு ஆகியவை குறித்த தொடர் கற்பித்தல் முறைகள், அறிவிப்புகள், சுற்றறிக்கைகள், அறிவிக்கைகள் பற்றிய தகவல்கள்  உள்ளடங்கியுள்ளன. தேசிய ஆசிரியர் தளம், அனைத்து ஆசிரியர்களுக்கும், எந்த நேரத்திலும், எங்கிருந்தும்  தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும். அது குறைந்தபட்ச, பொதுவாக்கப்பட்ட தொழில்நுட்ப தளம், பல்வேறு நவீன வழிமுறைகளுடன் உருவாக்கப்பட்டிருக்கும். கற்பித்தல் மற்றும் கற்றல் அம்சங்களுக்கான உபகரணங்களும் அதில் இருக்கும். 

 

கல்வி என்பது ஒரு தொடர்ச்சியான நடைமுறையாகும். அதன் மூலம் அறிவுப் பரவலை, பெருந்தொற்று போன்ற எந்த இடையூறாலும் தடுத்து நிறுத்த முடியாது. கணினி தளங்கள் மூலம் கல்வியைப் பரப்பவும், ஆசிரியர்களுடன் கலந்துரையாடவும் பயன்படும் ஆன்லைன் கல்வி  மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாத்துள்ளது. பெருந்தொற்று காலத்திலும், கற்றலைத் தடுத்து நிறுத்த  வாய்ப்பளிக்கக் கூடாது  என்பதால், எந்த வித இடையூறும் இன்றி தரமான கல்வியை மாணவர்கள் பெறுவதற்கு அரசு தொடர்ந்து உதவி வருகிறது.

 



(Release ID: 1664048) Visitor Counter : 184


Read this release in: English