நிதி அமைச்சகம்

அரசு பங்குகளின் விற்பனைக்கான ஏலம் பற்றிய அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2020 6:58PM by PIB Chennai

அரசு பங்குகளை ஏல நடவடிக்கையின் மூலம் விற்பது குறித்த அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன் படி, (i) '5.22 சதவீத அரசு பங்கு, 2025' ரூ 8,000 கோடிக்கு விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் விற்கப்படும் (மறு-வெளியீடு).

(ii)  '6.19 சதவீத அரசு பங்கு, 2034' ரூ 12,000 கோடிக்கு விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் விற்கப்படும் (மறு-வெளியீடு).

(iii) '7.16 சதவீத அரசு பங்கு, 2050' ரூ 8,000 கோடிக்கு விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் விற்கப்படும் (மறு-வெளியீடு).

மும்பை கோட்டையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகத்தில் 2020 அக்டோபர் 16 (வெள்ளிக்கிழமை) அன்று இந்த ஏலங்கள் நடத்தப்படும். அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் அக்டோபர் 19 (திங்கள்) அன்று பணம் செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663774

******

(Release ID: 1663774)


(வெளியீட்டு அடையாள எண்: 1663914) வருகையாளர் எண்ணிக்கை : 115
இந்த வெளியீட்டை படிக்க: Manipuri , हिन्दी , English , Urdu