நிதி அமைச்சகம்

அகமதாபாத்தில் வருமானவரித்துறை சோதனை

Posted On: 09 OCT 2020 8:42PM by PIB Chennai

அகமதாபாத்தில் நில வர்த்தகம் மற்றும் கட்டுமானம்,ரியல் எஸ்டேட் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் ஒரு குழுமம் குறித்த நம்பகமான உளவுத் தகவல்கள் கிடைத்தன் அடிப்படையில் வருமானவரித்துறை சோதனைகளை மேற்கொண்டு கைப்பற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதுவரை நடைபெற்ற சோதனையின்போது, கணக்கில் வராத 69 லட்சம்ரூபாய் ரொக்கம், 82 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கைப்பற்றப்பட்டன. இதற்கிடையே, 18 வங்கி லாக்கர்கள் விவரங்களும் கண்டுபிடிக்கப்பட்டு அவை வருமானவரித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. குற்றங்களுக்கு ஆதாரமாக பெரும் ஆவணங்கள் மற்றும் மொபைல் போன்கள், பென்டிரைவ்கள், கணினிகளில் இருந்த டிஜிட்டல் தரவுகள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன.  

சில பொதுவான முகவரிகளில் இந்த குழுமத்துக்கு சொந்தமாக 96 நிறுவனங்கள் உள்ளன. நிலங்களை கைப்பற்றுவதற்கும் மற்றும் பணத்தை மாற்றுவதற்கும் இந்த நிறுவனங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான நிறுவனங்களின் பெயரில் உண்மையில் வணிகம் ஏதும் நடைபெறவில்லை என்பது தெரியவந்தது. மிகவும் சில எண்ணிக்கையிலான வருவாய் கணக்குகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நிறுவனங்கள் பதிவாளரிடம் பெரும்பாலான நிறுவனங்களின் கணக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை. முக்கிய குடும்ப உறுப்பினர்கள் அல்லாத இந்த நிறுவனங்களின் சில இயக்குநர்கள், வெறுமனே கையெழுத்துப்போடுவதற்கான செயல்பாடுகளுக்காக மட்டும் போலியான இயக்குநர்களாக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663253

---- 



(Release ID: 1663392) Visitor Counter : 104


Read this release in: English , Urdu , Hindi , Telugu