மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
5-வது நாள்- ரெய்ஸ் 2020; பெருந்தொற்று முன்னேற்பாடுகளில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதன் பங்கு குறித்த செறிவான விவாதங்கள் இறுதி நாளில் நடந்தன
Posted On:
09 OCT 2020 7:32PM by PIB Chennai
சமூக மேம்பாட்டுக்கான பொறுப்புடமையுள்ள செயற்கை நுண்ணறிவு 2020 –என்ற ரைஸ் 2020 என்ற உச்சி மாநாட்டின் இறுதி நாளில் பெருந்தொற்று முன்னேற்பாடுகளுக்கு செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவது, ஒத்துழைப்பு மற்றும் புதுமைகளை வளர்ப்பதில் செயற்கை நுண்ணறிவின் பங்கு, செயற்கை நுண்ணறிவை உபயோகித்து புதுமைகளை ஊக்குவிக்கும் அறிவார்ந்த தரவுக் களஞ்சியங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் போன்ற கருத்துகள் விவாதிக்கப்படுவதை காணமுடிந்தது.
முதல் அமர்வில், பெருந்தொற்று முன்னேற்பாடுகளுக்கான செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துதல் என்ற பொருளில் விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய நாராயணா மருத்துவமனைகளின் தலைவர் மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டி, “செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட மென்பொருள் சாதனங்கள் சுகாதாரபாதுகாப்பு அலுவலர்களின் முயற்சிகளை மேம்படுத்த உதவியாக இருக்கும் மற்றும் பெருந்தொற்றை மேலும் சிறப்பாக எதிர்கொள்வதற்கும் உதவியாக இருக்கும் என்றார். சுகாதாரப் பாதுகாப்பு மேலும் ஏற்றதாக பாதுகாப்பானதாக ஆவதற்கு மருத்துவ ஆய்வக அலுவலர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் கைகளில் உள்ள மொபைல் சாதனங்கள் அவர்கள் கையில் இருக்கும் பேனா மற்றும் பேப்பருக்கு மாற்றாக இருக்க வேண்டும். எதிர்கால பெருந்தொற்றுகளை எதிர்கொள்வதற்கு தயாராக டெலிமெட்ரிக் மற்றும் ரோபாட்டிக்ஸ் துறைகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் மருத்துவமனைகள் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்றார்.
இதே அமர்வில் பேசிய அப்பல்லோ மருத்துவமனைகளின் சிஐஓ அரவிந்த் சிவராமகிருஷ்ணன், “செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மென்பொருள் சாதனங்களை மேற்கொள்வதில் மருத்துவமனைகள் விரைவு காட்ட வேண்டும். செயற்கை நுண்ணறிவை ஏற்றுக் கொள்வதில் மருத்துவமனைகள் விரைவாகப் பணியாற்ற வேண்டும். சரியான தருணத்தில் சரியான தரவுகளைப் பெற வேண்டும். சரியான வளங்களுடன் திறன்களை கட்டமைத்தல், நடைமுறைகள் முழுவதிலும் நீடித்த செயற்கை நுண்ணறிவு இயக்க தொழில்நுட்ப தீர்வுகளைக் கட்டமைத்துச் செயல்படுத்த வேண்டும்,” என்றார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பயோ மெடிக்கல் தகவலியல் பிரிவின் தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் ஹர்ப்ரீத் சிங், “இந்தியாவில் கொவிட்-19 பரிசோதனைகளை விரைவாக அதிகரிக்க செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சாதனங்களை நாட்டின் உயர்ந்த மருத்துவ அமைப்பு பயன்படுத்தி வருகிறது. தவிர உயர்ந்த துல்லியமான விகிதத்தில் இறப்பு விகிதத்தை கணிப்பதற்கும் செயற்கை நுண்ணறிவு உபயோகப்படுத்தப்படுகிறது”, என்றார்.
அரசு ஆளுகையில் செயற்கை நுண்ணறிவை உபயோகப்படுத்துவதை முன்னெடுப்பது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா மாநில அரசுகள் எடுத்த முயற்சிகள் இரண்டு அமர்வுகளில் வெளிப்படுத்தப்பட்டதை இந்த நாளில் காணமுடிந்தது. இந்த அமர்வுகளில் தமிழகத்தின் சார்பில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், கர்நாடக மாநிலத்தின் சார்பில், கர்நடாகா ஸ்டார்ட் அப் மையத்தின் துணைத் தலைவர் பி.வி. சத்யநாராயணா ஆகியோர் முக்கிய உரையாற்றினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663220
---
(Release ID: 1663380)
Visitor Counter : 126