சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

வேளாண் சீர்திருத்த மசோதா, இடைத்தரகர்களை நீக்க உதவி செய்வதுடன், விளைபொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்வதை உறுதி செய்கிறது- திரு முக்தார் அப்பாஸ் நக்வி

அரசின் கொள்முதலும், குறைந்தபட்ச ஆதரவு விலையும் தொடரும்- திரு முக்தார் அப்பாஸ் நக்வி

Posted On: 04 OCT 2020 6:54PM by PIB Chennai

மத்திய அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி இன்று உத்தரப்பிரதேசத்தின் பரேலி மற்றும் ராம்பூரில் உள்ள ஹுர்ஹுரி, தனைலி ஆகிய கிராம மக்களுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், வேளாண் சீர்திருத்த மசோதா குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக கூறினார்.

 

 

 இந்த மசோதாவின் அடிப்படையில் ஒருபுறம் வேளாண்துறையில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் நீக்கப்படுவதோடு, மறுபுறம் விளை பொருட்களுக்கான உரிய விலையை விவசாயிகளே நிர்ணயித்துக் கொள்வதை இந்த மசோதா உறுதிப்படுத்தி உள்ளது என்று அவர் கூறினார்.

வேலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், விவசாயிகள் விளை பொருட்கள் வாணிபம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் ஆகிய சட்டங்கள்  நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இவற்றின் மூலம் விவசாயிகள் தங்கள் பொருட்களை வர்த்தகம் செய்வதற்கு புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார். மேலும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயிகள் பயனடையலாம் என்று அவர் குறிப்பிட்டார். எனினும் தற்போது நடைமுறையில் உள்ள அரசின் கொள்முதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து செயல்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

மேலும் உரிமம் பெற்ற வியாபாரிகளிடம் தான் விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்க வேண்டும் என்ற அவசியம் இனி இல்லை என்றார் அவர். மூன்று நாட்களில் விவசாயிகளுக்கான  தொகை அவர்களுக்கு வந்து சேரும் என்று குறிப்பிட்ட அமைச்சர், இதன்மூலம் ஒரே தேசம் ஒரே வர்த்தகம் என்ற கனவும் நனவாகும் என்று கூறினார்.

விவசாயிகள் மற்றும் கிராமங்களின் நலனுக்காகவும், அவர்களது உரிமையை காக்கவும், பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661604

******

(Release ID: 1661604)



(Release ID: 1661691) Visitor Counter : 113


Read this release in: Hindi , English , Urdu , Punjabi