புவி அறிவியல் அமைச்சகம்

1994 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளுக்கு பிறகு, அனைத்திந்திய பருவ மழையின் அளவு இந்தாண்டு அதிகமாக உள்ளது

Posted On: 01 OCT 2020 4:17PM by PIB Chennai

2020-ஆம் ஆண்டு இந்தியாவில் பெய்துள்ள பருவமழை குறித்த கீழ்கண்ட தகவல்களை இந்திய வானிலை மையம் அளித்துள்ளது:

* 1994 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளுக்கு பிறகு, அனைத்திந்திய பருவ மழையின் அளவு இந்தாண்டு அதிகமாக உள்ளது

* 36 வானிலை துணைப் பகுதிகளில், 2 பகுதிகளில் மிக அதிக அளவிலும், 13-இல் அதிக அளவிலும், 16-இல் சராசரி அளவிலும் 2020-ஆம் ஆண்டு மழை பெய்துள்ளது

* வெறும் 5 துணைப் பகுதிகளில் மட்டுமே குறைவான அளவில் மழை பெய்துள்ளது

* பருவமழை-2020-இன் வழக்கமான இறுதி நாள் செப்டம்பர் 17 ஆகும். ஆனால், 11 நாட்கள் கழித்து, அதாவது, 2020 செப்டம்பெர் 28 அன்று தான் பருவமழை நின்றது.

* ஆகஸ்ட் 2020-இல் தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு 13-இல் இருந்து 41 சதவீதம் வரை அதிக மழை இந்தியாவில் பெய்தது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660645

****************



(Release ID: 1661010) Visitor Counter : 169


Read this release in: English , Urdu , Hindi