பாதுகாப்பு அமைச்சகம்
கடற்படை விருது விழா - 2020
प्रविष्टि तिथि:
25 SEP 2020 5:20PM by PIB Chennai
குடியரசு தினவிழாவை முன்னிட்டு கடற்படையில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு அறிவிக்கப்பட்ட வீரதீர விருதுகளை குடியரசுத் தலைவர் சார்பில் தென் மண்டல கடற்படை தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் ஏ.கே.சாவ்லா கொச்சி கடற்படை தளத்தில் நடந்த விழாவில் இன்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மொத்தம் 10 பதக்கங்கள் வழங்கப்பட்டன. 4 நவ் சேனா பதக்கங்கள்(வீரதீர) , 2 நவ் சேனா (அர்ப்பணிப்பு), நீண்ட காலம் பணியாற்றிய 4 பேருக்கு விஷிட் சேவா பதக்கங்களும் வழங்கப்பட்டன.
கடற்படையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வீரதீர செயல்கள் புரிந்தவர்களுக்கு, இந்நிகழ்ச்சியில் ஜீவன் ரக்ஷாக் பதக்கங்களும் அறிவிக்கப்பட்டன.
பதக்கங்கள் பெற்றவர்களின் விவரத்தை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்:
https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1659055
(रिलीज़ आईडी: 1659126)
आगंतुक पटल : 191