பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய பொருட்களின் ஆகஸ்டு 2020-க்கான மாதாந்திர உற்பத்தி அறிக்கை
Posted On:
24 SEP 2020 4:20PM by PIB Chennai
ஆகஸ்டு 2020-இல் கச்சா எண்ணெயின் உற்பத்தி 2577.49 ஆயிரம் மெட்ரிக் டன்களாக இருந்தது. இது இலக்கை விட 6.72% மற்றும் கடந்த வருட ஆகஸ்ட் மாதத்தை விட 6.27% குறைவாகும்.
ஆகஸ்டு 2020-இல் இயற்கை எரிவாயுவின் உற்பத்தி 2431.69 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர்களாக
இருந்தது. இது இலக்கை விட 14.24% மற்றும் கடந்த வருட ஆகஸ்ட் மாதத்தை விட 9.54% குறைவாகும்.
ஆகஸ்டு 2020-இல் சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெயின் உற்பத்தி 16149.67 ஆயிரம் மெட்ரிக் டன்களாக இருந்தது. இது இலக்கை விட 25.59% மற்றும் கடந்த வருட ஆகஸ்ட் மாதத்தை விட 26.43% குறைவாகும்.
ஆகஸ்டு 2020-இல் பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தி 17936.83 ஆயிரம் மெட்ரிக் டன்களாக இருந்தது. இது இலக்கை விட 18.27% மற்றும் கடந்த வருட ஆகஸ்ட் மாதத்தை விட 19.15% குறைவாகும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1658684
*
(Release ID: 1658748)
Visitor Counter : 191