சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாடு முழுவதும் 15,192 கொவிட்-19 மருத்துவமனைகள் : மத்திய அமைச்சர் திரு.அஸ்வினி குமார் சவுபே தகவல்
Posted On:
23 SEP 2020 6:41PM by PIB Chennai
மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் திரு.அஸ்வினி குமார் சவுபே மக்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
பிரதமரின் ஏழைகள் நலன் திட்டத்தின் கீழ் சுகாதாரப் பணியாளர்களுக்கான ரூ.50 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீடு திட்டம் கடந்த மார்ச் 30ம் தேதி அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் 63 பேருக்கு இந்த காப்பீடு திட்டத்தில் பணப் பலன் அளிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறைக்கு மத்திய, மாநில அரசுகளின் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2%-மாக உள்ளது.
கொரோனா பரிசோதனைக்கு தமிழகத்தில் 176 பரிசோதனை மையங்கள் உட்பட நாடு முழுவதும் 1777 பரிசோதனை மையங்கள் உள்ளன.
நாடு முழுவதும் 15,192 கொரோனா சிகிச்சை மருத்துவமனைகள் உள்ளன. இங்கு 15,38,541 தனிமை படுக்கைகள், 2,47,972 கூடுதல் படுக்கைகள், 66,638 ஐசியு படுக்கை வசதிகள், 33,024 வென்டிலேட்டர் வசதிகள் உள்ளன.
புனே, அகமதாபாத், ஐதராபாத், மும்பை ஆகிய இடங்களில் 7 மையங்களில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்வதற்கு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) உரிமம் வழங்கியுள்ளது.
2025ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இந்தாண்டில் ஆகஸ்ட் வரை மொத்த 11,76,164 காச நோயாளிகள் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்தாண்டில் 13,58,415 பேர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் 163 நர்சிங் கல்லூரிகளும், 1833 தனியார் நர்சிங் கல்லூரிகளும் என மொத்தம் 1996 நர்சிங் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் 5 அரசு நர்சிங் கல்லூரிகளும், 183 தனியார் நர்சிங் கல்லூரிகளும் உள்ளன.
*******************
(Release ID: 1658545)
Visitor Counter : 110