பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
தமிழ்நாடு உட்பட 20 மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது: அமைச்சர்
Posted On:
23 SEP 2020 2:42PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர், திரு நரேந்திர சிங் தோமர், கீழ்க்கண்ட தகவல்களை அளித்தார்.
இந்திய அரசியலமைப்பின் படி பஞ்சாயத்துகள் மாநிலப் பட்டியலில் வருகின்றன. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் மொத்தம் உள்ள இடங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தில் உள்ள தகவல்களின் படி, 20 மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
அவை ஆந்திரப் பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகும்.
இது தவிர, உள்ளாட்சி தலைவர் பதவிகளிலும் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1658145
*
MBS/GB
(Release ID: 1658300)