உள்துறை அமைச்சகம்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் குறைவு: மத்திய அமைச்சர் திரு.கிஷன் ரெட்டி தகவல்

Posted On: 21 SEP 2020 4:43PM by PIB Chennai

மத்திய உள்துறை இணையமைச்சர் திரு.கிஷன் ரெட்டி, மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

கொவிட் தொற்று நேரத்தில் தப்லிகி ஜமாத்தின் தில்லி நிசாமுதின் தலைமையகத்தில், சமூக இடைவெளியின்றி ஏராளமானோர் கூடியிருந்தனர். இதுவே, பலருக்கு கொரோனா தொற்று பரவ காரணமாக இருந்தது. அதனால் தப்லிகி ஜமாத் அமைப்பைச் சேர்ந்த 2361 பேரை தில்லி போலீசார் கடந்த மார்ச் 29ம் தேதி வெளியேற்றினர். 233 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதிக்குப்பின் தீவிரவாத சம்பவங்கள், கல் எறிதல் சம்பவங்கள், அப்பாவி மக்கள் கொல்லப்படுவது, வீரர்கள் உயிரிழக்கம் சம்பவங்கள் குறைந்துள்ளன. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதிக்கு முன்பு 393 நாட்களில் 443 தீவிரவாத சம்பவங்கள் நடந்தன. அதற்கு பிந்தை 393 நாட்களில் தீவிரவாத சம்பவங்கள் 206 ஆக குறைந்துள்ள.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநிலம் சம்பந்தப்பட்டது என்றாலும், மத்திய அரசும் பல நடவடடிக்கைகளை எடுத்துள்ளது. பாலியல் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க குற்றவியல் சட்ட திருத்தம் 2013 கொண்டு வரப்பட்டது. ஆபாச படங்கள் குறித்து புகார் தெரிவிக்க சைபர் கிரைம் இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சகம் 2018ம் ஆண்டு தொடங்கியது.

மத்திய ஆயுதப்படை போலீசாருக்காக 119 பெரிய கேன்டீன்கள், 1871 துணை  கேன்டீன்கள் 10 சிறிய கேன்டீன்கள் இயங்குகின்றன.

••••••••••••



(Release ID: 1657596) Visitor Counter : 126


Read this release in: English , Urdu