வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
செய்தி குறிப்பு எண். 4 (2020 வரிசை), பாதுகாப்பு துறையில் நேரடி அந்நிய முதலீட்டை சீராய்வு செய்தல்
இடுகை இடப்பட்ட நாள்:
18 SEP 2020 1:17PM by PIB Chennai
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகத்தின், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை, பாதுகாப்பு துறையில் நேரடி அந்நிய முதலீட்டை சீராய்வு செய்து செய்தி குறிப்பு எண். 4 (2020 வரிசை), வெளியிட்டுள்ளது.
அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அறிவிக்கை வெளியாகும் நாள் முதல் இந்த முடிவு அமலுக்கு வரும்.
பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றுடன் கலந்து ஆலோசித்த பிறகு, வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறையால் உரிம விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
இத்துறையில் அந்நிய முதலீடு என்பது பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதல் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டதாகும்.
முதலீடு செய்ய விரும்பும் நிறுவனம் உற்பத்தி மற்றும் வடிவமைப்பில் தன்னிறைவு பெற்று இருக்க வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருளுக்கு உற்பத்தி வசதியுடன் பராமரிப்பு மற்றும் ஆதரவு வசதிகளையும் முதலீடு செய்யும் நிறுவனம்/கூட்டு நிறுவனம் வைத்திருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்:
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1656082
******
(வெளியீட்டு அடையாள எண்: 1656136)
வருகையாளர் எண்ணிக்கை : 271