அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தொடத் தேவையில்லாத சோப்பு, தண்ணீர் விநியோகிப்பான், மின்-வகுப்பறை இன்னும் பல: கொவிட்-19 விஞ்ஞானிகளை வாழ்வதற்கான துரித கண்டுபிடிப்புகளை செய்யத் தூண்டியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்
Posted On:
13 SEP 2020 6:10PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா இலட்சியத்தைக் குறித்து பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், சுச்சுரா ஆகியவை இணைந்து இணைய கருத்தரங்கம் ஒன்றை நடத்தின.
இந்திய தொழில்நுட்பக் கழகம், காரக்பூர், இயக்குநர் பேராசிரியர் வீ கே திவாரி, சி எஸ் ஐ ஆர் - சி எம் ஈ ஆர் ஐ, துர்காபூர், இயக்குநர் பேராசிரியர் (டாக்டர்) ஹரிஷ் ஹிரானி, பிர்லா தொழில்கள் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் இயக்குநர் திரு வி எஸ் ராமச்சந்திரன், ஜே ஐ எஸ் பொறியியல் கல்லூரி, கல்யாணி, மின்னணு தொலைத்தொடர்பு பொறியியல் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் பிஸ்வரூப் நியோகி மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியான செல்வி திகந்திகா போஸ் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
தாமஸ் ஆல்வா எடிசனின் கண்டுபிடிப்புகளால் உந்தப்பட்ட செல்வி திகந்திகா போஸ், காற்றை வழங்கி வைரஸை கொல்லும் முக கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பாராட்டுகளை பெற்றுள்ளது.
இது போன்று, கொரோனா காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட தொடத் தேவையில்லாத சோப்பு, தண்ணீர் விநியோகிப்பான், மின்-வகுப்பறை போன்ற பல கண்டுபிடிப்புகளை பற்றி இந்த இணைய கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன.
கொவிட்-19, விஞ்ஞானிகளை வாழ்வதற்கான துரித கண்டுபிடிப்புகளை செய்யத் தூண்டியுள்ளது என என்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கூறினார்கள்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1653838
*********
(Release ID: 1653954)
Visitor Counter : 205