பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

நொடித்துப் போதல் மற்றும் திவாலாதல் வாரியம் நடத்திய ஆன்-லைன் வினாடிவினா தேர்வு முடிவுகள்

Posted On: 01 SEP 2020 9:33PM by PIB Chennai

நொடித்துப் போதல் மற்றும் திவாலாதல் வாரியம், மைகவ் இணையதளத்துடன் இணைந்து, நொடித்துப் போதல் மற்றும் திவாலாதல் சட்டம் 2016 தொடர்பான தேசிய ஆன்லைன் வினாடிவினா போட்டி ஒன்றை இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நடத்தியது. இந்தச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தப் போட்டி, 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்களுக்காக நடத்தப்பட்டது. இதில் 1,25,781 பேர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற பங்கேற்பாளர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட உள்ளது. முதல் 10 சதவீத இடத்தைப் பெற்றுள்ள பங்கேற்பாளர்கள் https://ibbi.gov.in/uploads/whatsnew/2020-09-01-180818-39l1c-d0d470965bd50a663be643b5d8bb2a1c.pdf. என்ற இணைப்பில் தமது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது தொடர்பான விரிவான தகவல்களுக்கு - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650502

****


(Release ID: 1650614) Visitor Counter : 163
Read this release in: Urdu , English , Hindi , Manipuri