பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் ரஷ்யா பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 01 SEP 2020 9:17PM by PIB Chennai

இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 75ம் ஆண்டு விழாவை நினைவு கூறும் வகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) ஒட்டுமொத்த பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைப்பு (CSTO), காமன்வெல்த் தனி நாடுகள் (CIS) ஆகியவற்றின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் செப்டம்பர் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் செர்கே சோயிகு அழைப்பு விடுத்தார். இதையடுத்து பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங், நாளை முதல் செப்டம்பர்  5ம் தேதி வரை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

இந்த பயணத்தில், ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் செர்கே சோயிகு-ஐ, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650490

---------

 


(வெளியீட்டு அடையாள எண்: 1650577) வருகையாளர் எண்ணிக்கை : 196
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri