எஃகுத்துறை அமைச்சகம்
முன்னாள் குடியரசுத்தலைவர் திரு பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு திரு தர்மேந்திர பிரதான் இரங்கல்
Posted On:
31 AUG 2020 8:45PM by PIB Chennai
முன்னாள் குடியரசுத்தலைவர் திரு பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு, மத்திய எஃகு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், “இந்திய அரசியலில் அரும்பெரும் தலைவராக விளங்கிய திரு பிரணாப் முகர்ஜியின் மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பாகும். அவர் விட்டுச் சென்றுள்ள வெற்றிடத்தை நிரப்புவது கடினம். இந்தியாவின் இளமையான நிதியமைச்சராக துவங்கி, 13-வது குடியரசுத் தலைவர் வரை அவர் நாட்டுக்கு சிறந்த பணியாற்றினார். அவருடைய அரசியல் அறிவுக் கூர்மை, நாடாளுமன்ற செயல்முறைகள் பற்றிய புரிதல், அரசியல் கட்சிகளைக் கடந்து ஒத்த கருத்தைத் திரட்டும் திறன் ஆகிய பண்புகளுக்காக அவர் என்றும் மதிக்கப்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.
(Release ID: 1650341)
Visitor Counter : 132