ஜல்சக்தி அமைச்சகம்
இந்தியா, பங்களாதேஷ், நேபாள், மியான்மர் மணடலத்தில் ஆற்று டால்பின்களின் பாதுகாப்பை மேம்படுத்தி மண்டலக் கூட்டுறவுக்கு வழிவகுக்க இந்த நாடுகளின் நிபுணர்கள் ஒன்றிணைந்துள்ளனர்
இடுகை இடப்பட்ட நாள்:
25 AUG 2020 10:40PM by PIB Chennai
"ஆறுகளின் ஆரோக்கியச் சூழல் அமைப்பு மற்றும் டால்பின்கள் மீது கோவிட-19 இன் தாக்கத்தை ஆராய்தல்: இந்தியா - பங்களாதேஷ்- மியான்மர் - நேபாள் பகுதியில் தற்போதய நிலவரம் மற்றும் பாறுகாப்பிற்கான எதிர்கால அணுகுமுறை" என்பது குறித்த வலைதளக் கருத்தரங்கத்திற்கு இந்திய உள்நாட்டு மீன் நலச்சங்கம், இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் மத்திய உள்நாட்டு மீன் நல ஆராய்ச்சி நிறுவனம், தூய்மை கங்கை தேசிய இயக்கம், தொழில்ரீதியான மீன் வளப் பட்டதாரிகள் சங்கம், தண்ணீர்ச் சூழல் அமைப்பு சுகாதாரம் மற்றும் மேலாண் நிறுவனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. ஆசிய மற்றும் தென்அமெரிக்கப் பகுதி நதிகளில் மட்டும் காணப்படும் தனித்த
தன்மை கொண்ட ஆற்று டால்பின்கள் விரைவாக அருகிவருகின்றன.
இந்தியாவின் தேசிய நீர்விலங்கான கங்கை டால்பின்கள் அழிந்துவிடும் அபாயமுள்ள விலங்கினம் என இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேசச் சங்கம் பிரகடனம் செய்துள்ளது. இந்த வலைதளக் கருத்தரங்கில் இந்த வகை டால்பின்களைப் பாதுகாத்துப் பேணுவதற்கான எதிர்கால வழிவகைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
******
(வெளியீட்டு அடையாள எண்: 1648688)
வருகையாளர் எண்ணிக்கை : 164